Sunday, February 5, 2012

வரவர
என் கனவில்
உன் பெயர்
மெதுவாய் அடிபடுகிறதாம்.
அம்மா சொல்கிறாள்.
.
.
அச்சச்சோ!அடிபடுகிறதா?
முத்தமிடுடா...ஆறிவிடும்!!
.
.
அடடா...
இனி
நன்றாய் அடிபடும்!!!
சரிதான்...
மீனென்று பார்த்தால்
நீ தூண்டிலா?

(தலைவன் தலைவியின் கண்களிடம் கேட்டது)
காதல் அரும்பியத் தருணம் அது.
அப்போதெல்லாம்
அவள் அழைப்பு வரும்போது
வீட்டுமணிச் சத்தம் கேட்டு
துள்ளி ஓடும் பள்ளி மாணவன் போல்
ஓட்டமாய் ஓடுவேன்
அவளிடம்.
இப்போதும் ஓடுகிறேன்.
இன்னும் வேகமாய்...
எதிர்த் திசையில்!!!