மெதுவாய்த்தான் உச்சரித்தேன் அவள் பெயரை... புதுக்கவிதையா..மரபுக்கவிதையா என பட்டிமன்றத்துக்கு கிளம்பிவிட்டார் பாப்பையா!!!
அருமைப் பெரியோர்களே!!! :P
Saturday, March 31, 2012
ஒரு ரகசியம்? சொல்லு. கிட்ட வா.. ம். இன்னும்.. ம். இன்னும் கிட்ட வாடா!! இன்னுமா ? ம் . ம். சொல்லு. 2012 ல உலகம் அழிஞ்சுடுமாம். அடச்ச...மொக்க.. (மனதில்..'இந்த நெருக்கம் போதுமடி... இனி எது அழிஞ்சா என்ன.. அழியலேன்னா என்ன? :P' )
Sunday, February 5, 2012
வரவர என் கனவில் உன் பெயர் மெதுவாய் அடிபடுகிறதாம். அம்மா சொல்கிறாள். . . அச்சச்சோ!அடிபடுகிறதா? முத்தமிடுடா...ஆறிவிடும்!! . . அடடா... இனி நன்றாய் அடிபடும்!!!
சரிதான்... மீனென்று பார்த்தால் நீ தூண்டிலா?
(தலைவன் தலைவியின் கண்களிடம் கேட்டது)
காதல் அரும்பியத் தருணம் அது. அப்போதெல்லாம் அவள் அழைப்பு வரும்போது வீட்டுமணிச் சத்தம் கேட்டு துள்ளி ஓடும் பள்ளி மாணவன் போல் ஓட்டமாய் ஓடுவேன் அவளிடம். இப்போதும் ஓடுகிறேன். இன்னும் வேகமாய்... எதிர்த் திசையில்!!!