Thursday, March 27, 2014

அவள்
முகம் பார்க்கும் கண்ணாடியை 
சற்றே
போட்டு உடையுங்கள்.
               
                                    -பொறாமையுடன்,

                                           காதல்.
போர்த்திக்கொண்டு
நீ தூங்கியும்
அதில்
அடங்கமறுத்து
அவிழ்ந்துச்சிரிக்கும்
உன்
திமிர்க்கூந்தலைச்
சுற்றி நின்று
நித்தம்
தூக்கம் தொலைக்கும்
கவிதைகள் ஓராயிரம்!
(பி.கு. அக்கவிதைகள்
             தபூசங்கருக்கும்
             தண்ணீர்காட்டியவையாம்!!!!)

Friday, February 15, 2013


 அடி கஞ்சக்கவிதையே! 
வைக்கும் பொட்டை 
கொஞ்சம் 
பெரிதாய்த்தான் வையடி!
சமயங்களில் 
நீயெது நிலவெது வென்றே
தெரியவில்லை!

Sunday, June 10, 2012


நீ
தந்துச் சென்ற நினைவுகள்,
தங்கிச் சென்றக்கனவுகள்,
மறந்துச் சென்ற மௌனங்கள்,
விட்டுச் சென்றப்பொழுதுகள்,
அனைற்றையும் பொறுக்கி
சுள்ளிகளாய் வைத்துள்ளேன்.
கூடு செய்வாயோ?
கொள்ளியாய் எரிப்பாயோ?
உன் தாய்மை
இறுதி செய்யட்டும்.

Monday, April 30, 2012

ஆராய்ச்சியோ அடுப்படியோ
செய்தத்தவறைத் திரும்பச்செய்வதில்
உடன்பாடில்லை எனக்கு.
நேற்று சாம்பார்.
இன்று புளிக்குழம்பு!!! :D

Saturday, April 14, 2012

மெதுவாய்த்தான் உச்சரித்தேன்
அவள் பெயரை...
புதுக்கவிதையா..மரபுக்கவிதையா என
பட்டிமன்றத்துக்கு கிளம்பிவிட்டார்
பாப்பையா!!!

அருமைப் பெரியோர்களே!!! :P

Saturday, March 31, 2012

ஒரு ரகசியம்?
சொல்லு.
கிட்ட வா..
ம்.
இன்னும்..
ம்.
இன்னும் கிட்ட வாடா!!
இன்னுமா ?
ம் .
ம். சொல்லு.
2012 ல உலகம் அழிஞ்சுடுமாம்.
அடச்ச...மொக்க..
(மனதில்..'இந்த நெருக்கம் போதுமடி... இனி எது அழிஞ்சா என்ன.. அழியலேன்னா என்ன? :P' )