கோவைக் கூட்டத்திற்கு
ஒரு
கோபத்தமிழனின்
கொந்தளிப்பு மாலை.
வானம் உடைபடக் கை தட்டி
இதனை
கழுத்தில் அணிந்துக்கொள்ளுங்கள் நல்லாய்
நா கிழிய
உரக்கச் சொல்லி
இதனை
உலகறியச் செய்யுங்கள்.
"கல்தோன்றி கணிணித் தோன்றியும்
சூடும் சுரணையும் தோன்றா
மூத்தத் தமிழ்க்குடி"
Friday, November 27, 2009
Tuesday, November 10, 2009
பைந்தமிழோ நீ..........
பைந்தமிழோ நீ..........பச்சைத்தமிழோ நீ.......
இலக்கியம் சொல்லா......இலக்கணக்குறிப்பா நீ.......
உன் புன்னகை....
அது இயல்பு நவிற்சியடி....
உன் விழிகள்...
அது தற்குறிப்பேற்றமடி...
சிமிட்டியபடியே....
வேண்டாம் வந்து விழாதே என்கிறதே-இந்தப் படுகுழியில்
வந்து விழாதே என்கிறதே....
உன் வெப்பப்பார்வையால்
என் தாகம் பெருகியதே...
உன் வடிகட்டிய தமிழால்
என் தாகம் தணிந்ததே...
அடி தமிழே...என் சகியே..
நேர்நேர் தேமா..
உந்தன் பெயர் சொல்லம்மா....
நிரைநேர் புளிமா...
அடி இந்த கூந்தல் போதுமா......
நேர்நிரை கருவிளம்....
தேடினேனே உந்தன் இல்லம்....
நிரைநிரை கூவிளம்....
அழைக்கிறதே உன்னை எந்தன் இல்லம்......
மழைதான் மழையும்தான் குறிஞ்சி...
காடுதான் காடும்தான் முல்லை.....
வயல்தான் வயலும்தான் மருதம்....
கடல்தான் கடலும்தான் நெய்தல்....
மணல்தான் மணலும்தான் பாலை......
இவை அனைத்தும் நீதானே.......கள்ளி........
பைந்தமிழோ நீ..........
இலக்கியம் சொல்லா......இலக்கணக்குறிப்பா நீ.......
உன் புன்னகை....
அது இயல்பு நவிற்சியடி....
உன் விழிகள்...
அது தற்குறிப்பேற்றமடி...
சிமிட்டியபடியே....
வே
வந்து விழாதே என்கிறதே....
உன் வெப்பப்பார்வையால்
என் தாகம் பெருகியதே...
உன் வடிகட்டிய தமிழால்
என் தாகம் தணிந்ததே...
அடி தமிழே...என் சகியே..
நேர்நேர் தேமா..
உந்தன் பெயர் சொல்லம்மா....
நிரைநேர் புளிமா...
அடி இந்த கூந்தல் போதுமா......
நேர்நிரை கருவிளம்....
தேடினேனே உந்தன் இல்லம்....
நிரைநிரை கூவிளம்....
அழைக்கிறதே உன்னை எந்தன் இல்லம்......
மழைதான் மழையும்தான் குறிஞ்சி...
காடுதான் காடும்தான் முல்லை.....
வயல்தான் வயலும்தான் மருதம்....
கடல்தான் கடலும்தான் நெய்தல்....
மணல்தான் மணலும்தான் பாலை......
இவை அனைத்தும் நீதானே.......கள்ளி........
பைந்தமிழோ நீ..........
"என் கிறுக்கா.."
என்னை என்னில் தேடி
இல்லை என்று குழம்பிப்போகிறேன்.....
அழகாய் வருகின்றாய்......
என் நெற்றிப்பொட்டில்-உன்
நெற்றி வைக்கின்றாய்.......
உன் விழித்திரையை
வெடித்துத் திறந்து
"இங்கே பாரடா
என் கிறுக்கா.." என்கிறாய்.....
உன்னைக் கொஞ்சாமல்
வேறென்ன செய்வதடி.......................
இல்லை என்று குழம்பிப்போகிறேன்.....
அழகாய் வருகின்றாய்......
என் நெற்றிப்பொட்டில்-உன்
நெற்றி வைக்கின்றாய்.......
உன் விழித்திரையை
வெடித்துத் திறந்து
"இங்கே பாரடா
என் கிறுக்கா.." என்கிறாய்.....
உன்னைக் கொஞ்சாமல்
வேறென்ன செய்வதடி.......................
நான் என்னடி செய்வேன்?
அடி செல்லமே.......
உன் கண்ணாடியில்
நான் தெரிந்தால்
நான் என்னடி செய்வேன்?
அன்று முளைத்த
ஒற்றை பருவினால்
உன் கன்னக் குழியில்
இடறி விழுந்தவனை
தூக்காமல் விட்டவள்
நீ..........
உன் கண்ணாடியில்
நான் தெரிந்தால்
நான் என்னடி செய்வேன்?
அன்று முளைத்த
ஒற்றை பருவினால்
உன் கன்னக் குழியில்
இடறி விழுந்தவனை
தூக்காமல் விட்டவள்
நீ..........
அடி கள்ளி...
நீ சிரிக்கிறாய்..
நானும் சிரிக்கிறேன்....
ஏன் என்கிறாய்...
அடி கள்ளி....
விதை ஒன்று போட
சுரை ஒன்றா முளைக்கும்......
நானும் சிரிக்கிறேன்....
ஏன் என்கிறாய்...
அடி கள்ளி....
விதை ஒன்று போட
சுரை ஒன்றா முளைக்கும்......
வெட்கப்பட்ட பௌர்ணமி
என்னவளின் கையில்
புது பேனா..
ஏதோ கிறுக்கினாள்...
என்ன என்றேன்..
எனது பெயர்...
ஏன் என்றேன்...
உன்னால் நான் கிறுக்கானேன்......
உன் பெயரையாவது நான் கிறுக்காக்குகின்றேன் என்றாள்...
செல்லமாய் நான் பார்க்க
வெட்கப்படுகிறாள் என் பௌர்ணமி....
புது பேனா..
ஏதோ கிறுக்கினாள்...
என்ன என்றேன்..
எனது பெயர்...
ஏன் என்றேன்...
உன்னால் நான் கிறுக்கானேன்......
உன் பெயரையாவது நான் கிறுக்காக்குகின்றேன் என்றாள்...
செல்லமாய் நான் பார்க்க
வெட்கப்படுகிறாள் என் பௌர்ணமி....
நீங்கள் வாக்களித்த ஆட்சியாளர்...
எங்கள் வயிறுக்கு
இன்கமிங் இல்லை..
டாப்அப் பண்ண
டப்பு இல்லை..
ரீசார்ஜ் செய்ய
தெம்பு இல்லை..
கடன் வாங்கி
கால் செய்தால்
"நீங்கள் வாக்களித்த ஆட்சியாளர்
தற்சமயம் தொடர்பெல்லைக்கு அப்பால்..
தயவுசெய்து ஆட்சி முடிந்த பிறகு
கால் செய்யவும்-நன்றி"
இன்கமிங் இல்லை..
டாப்அப் பண்ண
டப்பு இல்லை..
ரீசார்ஜ் செய்ய
தெம்பு இல்லை..
கடன் வாங்கி
கால் செய்தால்
"நீங்கள் வாக்களித்த ஆட்சியாளர்
தற்சமயம் தொடர்பெல்லைக்கு அப்பால்..
தயவுசெய்து ஆட்சி முடிந்த பிறகு
கால் செய்யவும்-நன்றி"
என்னப் பெத்தாரு.....
பிறந்த கிராமம்.......பிறந்த வீடு.......
வீட்டை நோக்கி நடக்கின்றேன்.....
பத்தடி தூரத்திலேயே
பார்த்துவிட்டார் என்னை.....
"என்னப் பெத்தாரு.....சம்முகம்....
எப்பிடிய்யா இருக்க......"
என் நாற்பது வயதும்
நொடியில் உடைந்து
'நான்கில்' நின்றது
அவர் மடியில்..
உடலம் உதறியபடி..
உள்ளம் சிதறியபடி...
"ந.ந..நல்லா இருக்கேன்"
மென்று விழுங்குமுன்
"வெயில்ல நிக்காதப்பு இப்புடி
நிழல்ல வந்து உக்காரு..
வருசம் பலவாச்சேய்யா
எஞ்சாமி.....உன்னப்பார்த்து.....
பொண்டாட்டி.....புள்ளக்குட்டியெல்லாம்
நல்லா இருக்குகதாய்யா".
"ந..நல்லா இருக்காங்க".
"உன் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும்
கொள்ளிக்குடம் தூக்க வந்த..
அந்தா....இந்தா.....ன்னு
ஆச்சுதேய்யா பதினஞ்சு வருசம்....
ஒத்த உசுரா இருக்கேன்
ஒப்புக்காவது வந்துருக்கலாமுல".
"வெ..வேலை அதிகம்".
"அதச்சொல்லு சாமி...
சீமையில இருக்குற அப்பு
உனக்குச்
சோலி ரொம்ப அதிகந்தாப்பு- நீ
பொழைக்கிறச் சீமைப்
பேரக் கேட்டா
எடுபட்ட பயக
'நாசமா போ' னுறானுவ".
அது 'நியு சவுத் வேல்ஸ்'.
"வேணாஞ்சாமி.....எழவு...
வாயில வரல...
அத விடுய்யா....
நான் பார்க்கப் பொறந்த
பச்ச மண்ணு - ஒன்னப்
பார்க்குறப்பவே
மனசு குளிருதுய்யா...
எம்மேல ஒன்னுக்குப்போன சாமி
இன்னிக்கு
எம்புட்டுப் பெரிய ஆளா நிக்குற...
கண்ணு கலங்குது சாமி எனக்கு
கடந்துப்போன காலத்த நெனச்சா..
உன் அப்புச்சி
காட்டுன பாசந்தாய்யா
இரத்தமா ஓடுது
எனக்குள்ள..
உன் அப்புச்சி
கை ஓங்குறப்ப
உன் அப்பன் ஒளிஞ்சது
எங்கிட்டதான்..
உன் அப்பன்
கை ஓங்குறப்ப
நீ ஒளிஞ்சதும்
எங்கிட்டதான்..
அதெல்லாமொரு காலஞ்சாமி...
நம்ம குடும்பம் எப்புடி...
வயலென்ன...வரப்பென்ன...
வளஞ்சு ஆடும் கதிரென்ன...
ஆடென்ன...மாடென்ன....
ஆத்துமீன் குழம்பென்ன...
மாமன் என்ன...மச்சான் என்ன...
மஞ்சத்தண்ணி திருவிழா என்ன...
அங்காளி என்ன...பங்காளி என்ன...
அய்யனார் கோவில் பொங்கலென்ன...
போச்சு சாமி....
எல்லாம் போச்சு...
பாசநேசமெல்லாம்
பரதேசம் போயிடுச்சு.....
எல்லாம்
பணமாப் போயிடுச்சு...
தாயா...புள்ளையா....
பழகுனதெல்லாம்
நாயே...பேயே...ன்னு
வையுதுக....
ஒண்ணா.....மண்ணா...
திரிஞ்சதெல்லாம்
ஒன் தலையா....என் தலையா... ன்னு
உருளுதுக....
அத விடு சாமி....
காலம் எங்கயோ
போகுது சாமி - இந்தச்
சல்லவாரிகளுக்குச்
சாதி எதுக்குச் சாமி....
போன மாசமுய்யா...
கீழத்தெருப் பையன்
மேலத்தெருப் பொண்ண
விரும்புறான்னு
சண்டப் போட்டானுவயா
நாயாட்டம்....
ஓடிவந்த ரெண்டும்
எங்கிட்ட ஒளிஞ்சும்
காப்பாத்த முடியலய்யா...
கேணியில விழுந்து
அதுக
மூச்சு ரெண்டும் போச்சுதய்யா...
இந்தச்
சல்லிப் பயலுவச்
சாதிச் சண்டையில
பூத்த 'மல்லி'யெல்லாம்
பொசுங்குது சாமி..
நெனச்சாலே
என் ஈரக்குலயெல்லாம்
நடுங்குது சாமி".
.
.
.
.
.
நான் உறைந்துவிட்டேன்....
பூட்டிக்கொண்ட தொண்டைக்கு
சாவியைப்போட்டது நாக்கு....
.
.
.
.
.
மேலே ஒரு நாரை....
.
.
சூ......சூ.........
.
.
"அத வெரட்டாதப்பு.....
பாவம்...பொட்ட நாரை....
சோடி நாரைய்ய
குறவனுக்குக் கொடுத்துட்டு
தவிச்சு நிக்குது
குஞ்சுகளோடத் தனியா.....".
.
.
நான்
நிலைகுலைகிறேன்...
என் சிந்தை
'ச்சீ' என்றது என்னை....
.
.
" என்ன சாமி...
நான் எம்புட்டு நேரமாப் பேசுறேன்..
'நல்லா இருக்கியா,வேப்பா' ன்னு
வார்த்த ஒண்ணுக்கேக்கத்
தோணலையா உனக்கு
என்னப் பெத்தாரு".
.
.
.
.
அழுகின்றேனோ....
.
.
.
.
ட்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
வண்டிச்சத்தம்.....
.
.
.
.
சார்,,,,,,சார்,,,,,
எல்லாம் முடிஞ்சுடுச்சு.....
இந்தாங்க பணம்.......வீட்ட நாளைக்கு இடிச்சுக்குறேன்.......
கொஞ்சம் எந்திரிச்சுக்கிட்டீங்கன்னா.....
.
.
.
.
.
ஏலே,,,,கருப்பசாமி....
ரொம்ப வயசுடா இதுக்கு....
தூராப் பார்த்து
ஆழமாப் போடு, கோடாரிய.......
வீட்டை நோக்கி நடக்கின்றேன்.....
பத்தடி தூரத்திலேயே
பார்த்துவிட்டார் என்னை.....
"என்னப் பெத்தாரு.....சம்முகம்....
எப்பிடிய்யா இருக்க......"
என் நாற்பது வயதும்
நொடியில் உடைந்து
'நான்கில்' நின்றது
அவர் மடியில்..
உடலம் உதறியபடி..
உள்ளம் சிதறியபடி...
"ந.ந..நல்லா இருக்கேன்"
மென்று விழுங்குமுன்
"வெயில்ல நிக்காதப்பு இப்புடி
நிழல்ல வந்து உக்காரு..
வருசம் பலவாச்சேய்யா
எஞ்சாமி.....உன்னப்பார்த்து.....
பொண்டாட்டி.....புள்ளக்குட்டியெல்லாம்
நல்லா இருக்குகதாய்யா".
"ந..நல்லா இருக்காங்க".
"உன் ஆத்தாளுக்கும் அப்பனுக்கும்
கொள்ளிக்குடம் தூக்க வந்த..
அந்தா....இந்தா.....ன்னு
ஆச்சுதேய்யா பதினஞ்சு வருசம்....
ஒத்த உசுரா இருக்கேன்
ஒப்புக்காவது வந்துருக்கலாமுல".
"வெ..வேலை அதிகம்".
"அதச்சொல்லு சாமி...
சீமையில இருக்குற அப்பு
உனக்குச்
சோலி ரொம்ப அதிகந்தாப்பு- நீ
பொழைக்கிறச் சீமைப்
பேரக் கேட்டா
எடுபட்ட பயக
'நாசமா போ' னுறானுவ".
அது 'நியு சவுத் வேல்ஸ்'.
"வேணாஞ்சாமி.....எழவு...
வாயில வரல...
அத விடுய்யா....
நான் பார்க்கப் பொறந்த
பச்ச மண்ணு - ஒன்னப்
பார்க்குறப்பவே
மனசு குளிருதுய்யா...
எம்மேல ஒன்னுக்குப்போன சாமி
இன்னிக்கு
எம்புட்டுப் பெரிய ஆளா நிக்குற...
கண்ணு கலங்குது சாமி எனக்கு
கடந்துப்போன காலத்த நெனச்சா..
உன் அப்புச்சி
காட்டுன பாசந்தாய்யா
இரத்தமா ஓடுது
எனக்குள்ள..
உன் அப்புச்சி
கை ஓங்குறப்ப
உன் அப்பன் ஒளிஞ்சது
எங்கிட்டதான்..
உன் அப்பன்
கை ஓங்குறப்ப
நீ ஒளிஞ்சதும்
எங்கிட்டதான்..
அதெல்லாமொரு காலஞ்சாமி...
நம்ம குடும்பம் எப்புடி...
வயலென்ன...வரப்பென்ன...
வளஞ்சு ஆடும் கதிரென்ன...
ஆடென்ன...மாடென்ன....
ஆத்துமீன் குழம்பென்ன...
மாமன் என்ன...மச்சான் என்ன...
மஞ்சத்தண்ணி திருவிழா என்ன...
அங்காளி என்ன...பங்காளி என்ன...
அய்யனார் கோவில் பொங்கலென்ன...
போச்சு சாமி....
எல்லாம் போச்சு...
பாசநேசமெல்லாம்
பரதேசம் போயிடுச்சு.....
எல்லாம்
பணமாப் போயிடுச்சு...
தாயா...புள்ளையா....
பழகுனதெல்லாம்
நாயே...பேயே...ன்னு
வையுதுக....
ஒண்ணா.....மண்ணா...
திரிஞ்சதெல்லாம்
ஒன் தலையா....என் தலையா... ன்னு
உருளுதுக....
அத விடு சாமி....
காலம் எங்கயோ
போகுது சாமி - இந்தச்
சல்லவாரிகளுக்குச்
சாதி எதுக்குச் சாமி....
போன மாசமுய்யா...
கீழத்தெருப் பையன்
மேலத்தெருப் பொண்ண
விரும்புறான்னு
சண்டப் போட்டானுவயா
நாயாட்டம்....
ஓடிவந்த ரெண்டும்
எங்கிட்ட ஒளிஞ்சும்
காப்பாத்த முடியலய்யா...
கேணியில விழுந்து
அதுக
மூச்சு ரெண்டும் போச்சுதய்யா...
இந்தச்
சல்லிப் பயலுவச்
சாதிச் சண்டையில
பூத்த 'மல்லி'யெல்லாம்
பொசுங்குது சாமி..
நெனச்சாலே
என் ஈரக்குலயெல்லாம்
நடுங்குது சாமி".
.
.
.
.
.
நான் உறைந்துவிட்டேன்....
பூட்டிக்கொண்ட தொண்டைக்கு
சாவியைப்போட்டது நாக்கு....
.
.
.
.
.
மேலே ஒரு நாரை....
.
.
சூ......சூ.........
.
.
"அத வெரட்டாதப்பு.....
பாவம்...பொட்ட நாரை....
சோடி நாரைய்ய
குறவனுக்குக் கொடுத்துட்டு
தவிச்சு நிக்குது
குஞ்சுகளோடத் தனியா.....".
.
.
நான்
நிலைகுலைகிறேன்...
என் சிந்தை
'ச்சீ' என்றது என்னை....
.
.
" என்ன சாமி...
நான் எம்புட்டு நேரமாப் பேசுறேன்..
'நல்லா இருக்கியா,வேப்பா' ன்னு
வார்த்த ஒண்ணுக்கேக்கத்
தோணலையா உனக்கு
என்னப் பெத்தாரு".
.
.
.
.
அழுகின்றேனோ....
.
.
.
.
ட்ர்ர்ர்ர்ர்ர்ர்.....
வண்டிச்சத்தம்.....
.
.
.
.
சார்,,,,,,சார்,,,,,
எல்லாம் முடிஞ்சுடுச்சு.....
இந்தாங்க பணம்.......வீட்ட நாளைக்கு இடிச்சுக்குறேன்.......
கொஞ்சம் எந்திரிச்சுக்கிட்டீங்கன்னா.....
.
.
.
.
.
ஏலே,,,,கருப்பசாமி....
ரொம்ப வயசுடா இதுக்கு....
தூராப் பார்த்து
ஆழமாப் போடு, கோடாரிய.......
ஆத்தா....முக்குழி.....
பால்வாடிப்பள்ளி..
மாலை மணி 4.
"படிச்சது போதுண்டா.. ராமசாமி..
இன்னிக்கு வெள்ளிக்கிழமை
உன் ஆத்தா சுடுற
முக்குழி வாசம்
எனக்கு வருது"
சொன்னுச்சு கரும்பலகை.
ஆமா......ஆமா.......
அய்யோ......
இந்த வீட்டு மணிய அடிங்கடா......
வீட்டுக்குப் போவணும்......ஆத்தா தேடும்........
சுடுற முக்குழிய
சூதானமாத் திங்கணும்.....
ஆறுன முக்குழி
ஆறேழுத் திங்கணும்.....
இனிப்பு முக்குழி - உப்பு முக்குழி
ரெண்டுந் திங்கணும்.....
அப்பன் படத்துக்கு முன்னாடி
ரெண்டு ரெண்டு வச்சுட்டு
கண்ண கசக்கும் என் ஆத்தா....
அப்புறம்...
மாமா வீட்டுல கொடுக்கச்சொல்லி
இலையில வச்சுத்தரும் என் ஆத்தா...
அப்புறம்...
"மணி" கத்திக்கிட்டேயிருக்கும்......
அதுக்கும் நாலு வச்சுடும் என் ஆத்தா....
ஆத்தா....முக்குழி.....
முக்குழி.....ஆத்தா....
அய்யோ......
இந்த வீட்டு மணிய.......
டிங்டிங்டிங்டிங்டிங்........
அடிச்சுப்புட்டாண்டோய்.......
டேய்....இடிக்காதிங்கடா.....
தள்ளு....தள்ளு.....
டேய்.....கரண்டி வாயா.....தள்ளுடா....
"டேய் ராமசாமி.....வாடா....நடந்துப் போவலாம்"
"அடப்போடா........எனக்கு வேல இருக்குன்னு"
ஒரே ஓட்டந்தான்....
"மணி"யும் ஓடியாந்துடுச்சு....
வீடு வந்துருச்சு......
கதவு மூடியிருந்துச்சு....
ஆத்தா?.....ஆத்தா?....
தோளுல விழுந்துச்சு
மாமாவோட கையி...
.
.
.
.
.
.
"என் அப்பு......
இன்னியோட ஒரு மாசமாச்சுடா....
உன் ஆத்தா
சாமிக்கிட்டப் போயி....."
மாலை மணி 4.
"படிச்சது போதுண்டா.. ராமசாமி..
இன்னிக்கு வெள்ளிக்கிழமை
உன் ஆத்தா சுடுற
முக்குழி வாசம்
எனக்கு வருது"
சொன்னுச்சு கரும்பலகை.
ஆமா......ஆமா.......
அய்யோ......
இந்த வீட்டு மணிய அடிங்கடா......
வீட்டுக்குப் போவணும்......ஆத்தா தேடும்........
சுடுற முக்குழிய
சூதானமாத் திங்கணும்.....
ஆறுன முக்குழி
ஆறேழுத் திங்கணும்.....
இனிப்பு முக்குழி - உப்பு முக்குழி
ரெண்டுந் திங்கணும்.....
அப்பன் படத்துக்கு முன்னாடி
ரெண்டு ரெண்டு வச்சுட்டு
கண்ண கசக்கும் என் ஆத்தா....
அப்புறம்...
மாமா வீட்டுல கொடுக்கச்சொல்லி
இலையில வச்சுத்தரும் என் ஆத்தா...
அப்புறம்...
"மணி" கத்திக்கிட்டேயிருக்கும்......
அதுக்கும் நாலு வச்சுடும் என் ஆத்தா....
ஆத்தா....முக்குழி.....
முக்குழி.....ஆத்தா....
அய்யோ......
இந்த வீட்டு மணிய.......
டிங்டிங்டிங்டிங்டிங்........
அடிச்சுப்புட்டாண்டோய்.......
டேய்....இடிக்காதிங்கடா.....
தள்ளு....தள்ளு.....
டேய்.....கரண்டி வாயா.....தள்ளுடா....
"டேய் ராமசாமி.....வாடா....நடந்துப் போவலாம்"
"அடப்போடா........எனக்கு வேல இருக்குன்னு"
ஒரே ஓட்டந்தான்....
"மணி"யும் ஓடியாந்துடுச்சு....
வீடு வந்துருச்சு......
கதவு மூடியிருந்துச்சு....
ஆத்தா?.....ஆத்தா?....
தோளுல விழுந்துச்சு
மாமாவோட கையி...
.
.
.
.
.
.
"என் அப்பு......
இன்னியோட ஒரு மாசமாச்சுடா....
உன் ஆத்தா
சாமிக்கிட்டப் போயி....."
Tuesday, November 3, 2009
பாரதி- நீ ஏமாந்து போய்விட்டாய்.....
வாழ்க முக்குலத்தோர் - ஒரு டீ
வாழ்க வன்னியர் - ஒரு வடை
வாழ்க நாடார் - ஒரு போண்டா
வாழ்க பள்ளர் - ஒரு பிரியாணி
வாழ்க பிராமணர் - ஒரு பொங்கல்
பாரதி - நீ ஏமாந்து போய்விட்டாய்......
நான் பாடுவதைக்கேள்...
"சாதிகள் இருக்குதடி பாப்பா- குலம்
தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் லாபம்"
வாழ்க வன்னியர் - ஒரு வடை
வாழ்க நாடார் - ஒரு போண்டா
வாழ்க பள்ளர் - ஒரு பிரியாணி
வாழ்க பிராமணர் - ஒரு பொங்கல்
பாரதி - நீ ஏமாந்து போய்விட்டாய்......
நான் பாடுவதைக்கேள்...
"சாதிகள் இருக்குதடி பாப்பா- குலம்
தாழ்த்தி உயர்த்திச் சொல்லல் லாபம்"
நீ ரொம்ப நல்லவளடி......
மழை வருமா.. என்றேன்.....
என்னைக்கேட்டால்..... என்றாள்.......
மயிலுக்குத்தெரியுமடி..என்றேன்.....
சிரித்து அணைக்கின்றாள்......
அடி என் இவளே....
எவ்வளவு பொய் சொன்னாலும் தாங்குகிறாயே......
நீ ரொம்ப நல்லவளடி......
ஆவ்.......................................
என்னைக்கேட்டால்..... என்றாள்.......
மயிலுக்குத்தெரியுமடி..என்றேன்.....
சிரித்து அணைக்கின்றாள்......
அடி என் இவளே....
எவ்வளவு பொய் சொன்னாலும் தாங்குகிறாயே......
நீ ரொம்ப நல்லவளடி......
ஆவ்.....................................
அப்பப்பா....இந்தப்பெண்களும்
மாமல்லக் கடற்கரை
மாலை மணி ஐந்து
நான்,அவள் - முன்னால்
வயிற்றெரிச்சலில் வந்துவந்து
முறைத்த அலைகள்...
தூரத்தில் சூரியன்,மேகம்,வானம்
அவற்றின் கொடுக்கல் - வாங்கல்கள்..
முகவரிகள் மறந்த முத்தங்களை
முதுகில் கட்டிக்கொண்டு
சுற்றித்திரிந்த காற்று..
அருகில் பலரது கால்தடங்கள்..
எங்களுக்கான நிமிடங்கள்
மௌனங்களில் நத்தைகளாய்...
சட்டெனத்திரும்பி என்னைத்
திட்டடா என்றாள்..
வேண்டாமடி பெண்ணே....உன்
கயல்விழித்தொட்டி
கசிந்து விடுமென்றேன்...
அடம்பிடித்தாள்...
நான் ஆரம்பித்தேன்..
"அடி என் இதயச்சிறுக்கி..
நீ என் சுவாசமாய்ப் போக...
உன் தலையில் இடிமுத்தம் விழ..
நீ தனியாவே இருக்க மாட்ட..
உன்னை நான் கொண்டுபோக..
உனக்கு என் எண்ணக்காய்ச்சல் வர...
உன் கழுத்தில் என் தாலி விழ..
உன் காலில் என் கொலுசு விழ..
உன் கையில் என் வளையல் முளைக்க..
உனக்கு heart attach வர..
உன்..... ......... ......
தொட்டி கசிந்துவிட்டது.
எழுந்து ஓடினாள்..
நின்று அழுகிறாள்...
அலைகள் திட்டத்துவங்கின..
சூரியன் சினத்தில் சிவந்திருந்தான்.
நான் எழுகின்றேன்...
மனதில்..
"நான்தான் சொன்னேனடி..
அப்பப்பா....
இந்தப்பெண்களும்
இவர்கள் பிடிவாதமும்..."
மாலை மணி ஐந்து
நான்,அவள் - முன்னால்
வயிற்றெரிச்சலில் வந்துவந்து
முறைத்த அலைகள்...
தூரத்தில் சூரியன்,மேகம்,வானம்
அவற்றின் கொடுக்கல் - வாங்கல்கள்..
முகவரிகள் மறந்த முத்தங்களை
முதுகில் கட்டிக்கொண்டு
சுற்றித்திரிந்த காற்று..
அருகில் பலரது கால்தடங்கள்..
எங்களுக்கான நிமிடங்கள்
மௌனங்களில் நத்தைகளாய்...
சட்டெனத்திரும்பி என்னைத்
திட்டடா என்றாள்..
வேண்டாமடி பெண்ணே....உன்
கயல்விழித்தொட்டி
கசிந்து விடுமென்றேன்...
அடம்பிடித்தாள்...
நான் ஆரம்பித்தேன்..
"அடி என் இதயச்சிறுக்கி..
நீ என் சுவாசமாய்ப் போக...
உன் தலையில் இடிமுத்தம் விழ..
நீ தனியாவே இருக்க மாட்ட..
உன்னை நான் கொண்டுபோக..
உனக்கு என் எண்ணக்காய்ச்சல் வர...
உன் கழுத்தில் என் தாலி விழ..
உன் காலில் என் கொலுசு விழ..
உன் கையில் என் வளையல் முளைக்க..
உனக்கு heart attach வர..
உன்..... ......... ......
தொட்டி கசிந்துவிட்டது.
எழுந்து ஓடினாள்..
நின்று அழுகிறாள்...
அலைகள் திட்டத்துவங்கின..
சூரியன் சினத்தில் சிவந்திருந்தான்.
நான் எழுகின்றேன்...
மனதில்..
"நான்தான் சொன்னேனடி..
அப்பப்பா....
இந்தப்பெண்களும்
இவர்கள் பிடிவாதமும்..."
Subscribe to:
Posts (Atom)
